தமிழ்ல நல்ல படம்னா? மோகன்லால் பாராட்டி பேசிய அந்த தமிழ் படம்

by Rohini |
mohanlal
X

mohanlal

மோகன்லால்:

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் என அனைவருக்கும் தெரியும். அவர் சினிமாவிற்கு வந்த 47வருடங்களில் முதன் முதலில் ஃபேரோஸ் என்ற படத்தின் மூலம் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். முற்றிலும் 3டி தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் குழந்தைகளுக்கான படமாக வரவிருக்கிறது. படத்தின் பிரிவியூவ் ஷோவை பார்த்த பல பிரபலங்கள் படத்தை மிகவும் பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்த மோகன்லாலை பல தனியார் யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அதில் ஏராளமான விஷயங்களை மோகன்லால் பகிர்ந்திருக்கிறார். தமிழில் இருவர் படம் தான் மோகன்லால் நடித்த முதல் தமிழ் படம். அதனை அடுத்து உனக்குள் ஒருவன், ஜில்லா, வேட்டையன் போன்ற படங்களை குறிப்பிடலாம்.


முக்கியமான கேரக்டர்:

ஏன் தமிழில் நிறைய படங்கள் பண்ணவில்லை என்று கேட்டதற்கு யாரும் என்னை கூப்பிடல என பதிலளித்திருக்கிறார். ஆனால் அதைவிட தமிழில் எனக்கு பிடித்தமான ரோல் வரவேண்டும். கிடைத்த ரோலில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இருவர் மாதிரியான படங்களை பார்த்தால் என்னுடைய கேரக்டர் இன்றுவரை பேசப்படுகின்றன. அப்படியான ரோல் கிடைத்தால் நான் கண்டிப்பாக தமிழில் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்,

ஆனால் எத்தனையோ தமிழ் படங்களில் நடிக்க மோகன்லாலுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அது எல்லாவற்றையும் ரிஜக்ட் செய்திருக்கிறாராம் மோகன்லால். எந்த கதாபாத்திரமானாலும் அதற்கு நான் மலையாளத்திலேயே நடித்து விடுவேனே என்று கூறினார். மேலும் இருவர் படத்திற்கு பிறகும் மணிரத்னமும் மோகன்லாலை நடிக்க அழைத்திருக்கிறார்.

கமலின் ஃபேவரைட் ஆக்டர்:

ஆனால் மோகன்லால் தான் போகவில்லையாம். அதனால் இதை பற்றி சுஹாசினி பேசும் போது உடனே மணிரத்னத்திடம் அழைத்துக் கொண்டு போகிறேன். அடுத்த படம் பண்றீங்க என மோகன்லாலை பார்த்து சுஹாசினி கூறினார். இதில் கமலுக்கு மிகவும் ஃபேவரைட்டான நடிகரும் மோகன்லால்தானாம். இதை சுஹாசினியே கூறினார். அதுவும் கமல் 27 வயதாக இருக்கும் போதே மோகன்லாலை பற்றி பேசிக் கொண்டே இருப்பாராம்.


இந்த நிலையில் மலையாளத்தில் நல்ல நல்ல கதைகள் வருகிறது. தமிழில் அப்படி வருவதில்லை என்று கேட்கும் போது அதற்கு மோகன்லால் ‘தமிழில் கதைகள் வருவதில்லையா? சமீபத்தில் வெளிவந்த லப்பர் பந்து படத்தை பற்றி கூறியிருந்தார். அருமையான படம். அந்த படத்தை பார்த்தேன்’ என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது டிராவலில் இருப்பதால் தமிழ்படங்கள் பார்க்கமுடிவதில்லை என்று கூறினார்.

Next Story