×

அப்பாவிற்கு அம்மா ஒரு அழகிய ரோஜா - நா முத்துகுமார் மகன் எழுதிய கவிதை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றி காலத்தால் அழியாத மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவர் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவினால் காலமானார்.

 

காஞ்சிபுரத்தை சேர்ந்த இருவருக்கு தீபலக்ஷ்மி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலஷ்மி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தந்தை நா முத்துகுமார் இறந்து 5 வருடங்கள் ஆன நிலையில் மகன் அப்பாவை போலவே கவிதைகளை எழுதி வருகிறார். இன்று தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு மகன் ஆதவன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இதோ அந்த மழலையின் கவிதை...

"என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

- மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்.

From around the web

Trending Videos

Tamilnadu News