×

மாஸ்டர் படத்தில் மணி ஹெஸ்ட் ப்ரோபஸர்... வைரலாகும் நெட்ப்ளிக்ஸ் ட்வீட்... துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் மணி ஹெஸ்ட் தொடரின் முக்கிய கதாபாத்திரமான ப்ரோபஸர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 
 

தமிழ் சினிமாவின் கிங்காக இருப்பவர் தளபதி விஜய். வருடா வருடம் தீபாவளி தினத்தில் இவரின் படத்தை பார்க்காமல் ரசிகர்களால் இருக்க முடியாது. ஆனால், கொரோனா பிரச்சனையால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர், எந்த படமும் ரீலிஸ் செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து, தியேட்டர்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 50 சதவீத டிக்கெட்கள் மட்டுமே நிரப்பட வேண்டும் என விதி அமல்படுத்தப்பட்டு இருந்தது. 

இதன் பின்னர், நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. விஜயும் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளை முழுமையாக நிரப்ப கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், அது தற்கொலைக்கு சமம் என மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்புக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இத்தனை களேபரத்திற்கு இடையிலும், ரசிகர்கள் மாஸ்டர் படத்தினை வரவேற்க தயாராகி இருக்கின்றனர். 

தொடர்ந்து, படத்தின் ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் இடையே வைரலாகி இருக்கிறது. இந்நிலையில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் ஒரு ட்வீட் ரசிகர்கள் செம லைக்ஸ் அள்ளி வருகிறது. அதில், மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படத்தை இணைத்து எங்க வாத்தியை உங்க வாத்திக்கு பிடித்ததில் மகிழ்ச்சி என ட்வீட் இருந்தது. அப்படத்தில், விஜயிடம் இருக்கும் லேப்டாப்பில் ப்ரோபஸரின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. இதற்கு பல ரசிகர்கள் செம கலாய் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். 


ஒரு வங்கி கொள்ளையை எப்படி ஒரு குழு அட்டகாசமாக செய்கிறது என்பதே மணி ஹெஸ்ட் வெப் சீரிஸின் கரு. இதில், மூளையாக செயல்படும் முக்கிய ஹீரோ தான் ப்ரோபஸர் என்பது குறிப்படத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News