×

தொடங்க போகுது பருவமழை… நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுங்கள் – முதல்வரின் உத்தரவு!

கனமழை பெய்தாலும் உபரி நீர் மழைநீர் வடிகால் வழியாக தேங்காமல் செல்ல மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

 

கனமழை பெய்தாலும் உபரி நீர் மழைநீர் வடிகால் வழியாக தேங்காமல் செல்ல மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

 முதல்வர் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

•             காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினர், 4,699 தீயணைப்பு வீரர்கள், 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

•             கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது

•             பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11.482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,299 ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகள் மாற்றப்பட்டுள்ளன.

•             4,154 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

•             11,387 பாலங்கள் மற்றும் 1,09,808 சிறு பாலங்கள் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது

•             மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பு உள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

•             பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன


பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு:

•             மழை காலங்களில் கீழே விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

•             மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

•             மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்

•             வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் Bleaching powder, மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்

•             தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், போதுமான அளவு மருந்துகள் இருப்பிடம், தயார் நிலையில் இருக்க வேண்டும் மேலும் மருத்துவமனையில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்

•             பேரிடர் காலங்களில் இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள், நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும

•             பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள் (Mock Drill) கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியிடன் பயிற்சி அளிக்க வேண்டும்

•             பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்

•             தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும்

•             பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

From around the web

Trending Videos

Tamilnadu News