5 நாட்களில் ரூ.18 கோடியை தாண்டிய மூக்குத்தி அம்மன் 2 !..

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஐந்தாவது நாளை கடந்துள்ளது. 
 
mookuthi aman 2

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஐந்தாவது நாளை கடந்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் . கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரமும், படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துகளும் ரசிகர்களைக் கவர்ந்தன. 

அந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படத்தில் மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான காட்சிகள், பக்தி சார்ந்த அம்சங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜிக்கு பதில் இப்படத்தை  சுந்தர்.சி இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

 கடந்த வாரம் வெளியான மூக்குத்தி அம்மன் 2  திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரத்திற்கான மாஸ் காட்சிகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.ஆனாலும் வழக்கமான அம்மன் படங்களில் காணப்படும் அதே டெம்ப்ளேட்டுக்ளே இப்படத்திலும் உள்ளன என பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன்   2  திரைப்படம் ஐந்தாவது நாளில் இந்திய அளவில் ரூ.2.10 கோடி நிகர வசூல் செய்துள்ளது. தமிழ் மொழியில் 1,380 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1.93 கோடியும், தெலுங்கில் 225 காட்சிகள் மூலம் ரூ.17 லட்சமும் வசூலாகியுள்ளது. மொத்தமாக ஐந்தாவது நாளில் 1,605 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
.
வசூல் விவரங்களின்படி, ஐந்தாவது நாளில் மட்டும் சுமார் 1,82,878 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. முதல் ஐந்து நாட்களில் மொத்தமாக சுமார் 13,93,109 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.18.72 கோடி மொத்த வசூலை எட்டியுள்ள  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா அல்லது கலவையான விமர்சனங்கள் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web