Mookuthi Amman 2 Box Office: மூக்குத்தி அம்மன் 2 முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேன்டஸி, காமெடி, திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடித்த இந்த படத்தை ஆர். ஜே. பாலாஜி, என்.ஜே. சரவணன் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை அடுத்து நேற்று மூக்குத்தி அம்மன் 2 வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜிக்கு பதில் சுந்தர்.சி இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்துள்ளனர். மிகப்பெரிஅய் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் நேற்று வெளியானது. இப்படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே வருகின்றன. காரணம் பல பக்தி படங்களில் பர்த்த அதே டெம்ப்ளேட் கதை மற்றும் சுந்தரி. சி க்கு கூ கை கொடுக்கும் காமெடி இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. Sacnilk வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.1.88 கோடி நிகர வசூல் செய்துள்ளது. மொத்த வசூல் ரூ.2.15 கோடியாகப் பதிவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொத்தம் 2,127 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதில் தமிழில் மட்டும் ரூ.1.75 கோடியும், தெலுங்கில் ரூ.13 லட்சமும் நிகர வசூல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.1.80 கோடி மொத்த வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் ஒட்டுமொத்த திரையரங்க இருக்கை நிரப்பல் 24.1 சதவீதமாக இருந்துள்ளது. இரவுக் காட்சிகளில் ரசிகர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அந்த தாளம் கூறுகிறது. ஆனாலும் இப்படம் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே திரையுலகினர் கூறுகின்றனர்.
