மஹாசக்தியின் உலகம் இதுதான்... மூக்குத்தி அம்மன் 2 கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி  திரைப்படத்தின் புதிய  World of Mahasakthi  கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 
mookuthi amman 2

 

நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி  திரைப்படத்தின் புதிய  World of Mahasakthi  கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


கடந்த 2020-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான  மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கியிருந்தனர். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின்  இரண்டாம் பாகத்தை  சுந்தர் சி  இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் நடித்துள்ளார். அவருடன்  ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அபிநயா, சிங்கம்புலி, நிதின் சத்யா, ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, சினேகா, குஷ்பு  உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

படத்தை  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ்  தயாரித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.  ஹிப் ஹாப் தமிழா  இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான  Rise of Mahasakthi டீசர், பழங்கால ராஜ்ஜியம், போர், தெய்வீக சக்தி என பிரம்மாண்டமான கதைக்களத்தை அறிமுகப்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 

இந்த நிலையில் தற்போது  இப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் World of Mahasakthi என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி  திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

From Around the web