குருபூஜை, அன்னதானம்.. மடமா ஆக்கிடுவாங்க போல.. மூக்குத்தி அம்மன் 2க்காக இப்படி ஒரு அலப்பறையா?

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மூக்குத்தி அம்மன். எப்போதும் இருக்கும் சாமி படம் மாதிரி இல்லாமல் மூக்குத்தி அம்மன் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு சாமி படமாக இருந்தது. ஆன்மீகம் பக்தி என்ற பெயரில் மக்கள் எந்த அளவு மூடநம்பிக்கைகள் அற்று இருக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக இந்த படத்தில் காட்டி இருந்தார் ஆர் ஜே பாலாஜி.
இதற்கு முன்பு வரை மீனா, கே ஆர் விஜயா ,ரோஜா என பார்ப்பதற்கே ஒரு அம்மன் மாதிரியான உணர்வை ஏற்படுத்திய நிலையில் இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு ஸ்டைலிஷ் ஆன அம்மனாக காட்சியளித்து வித்தியாசமான அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது .இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .
ஆனால் இரண்டாம் பாகத்தில் ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில் ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கவில்லை. சுந்தர் சி தான் இயக்குகிறார். படத்தை ஐசரி கணேஷ் நயன்தாரா இணைந்து தயாரிக்க இந்த படத்திற்கு அஜ்மல் இசையமைக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் நயன்தாராவின் கால்ஷீட் பிரச்சினை ஒரு பக்கம் சுந்தர் சி யின் மற்ற திரைப்படங்கள் ஒரு பக்கம் என இந்த படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் எந்த ஒரு படத்தின் பூஜை என்றாலும் ஒன்று எளிதாக வைப்பார்கள் .இல்லையெனில் சமீபகாலமாக விஜயின் பட பூஜை எப்படி நடக்கிறதோ அந்த மாதிரியான ஒரு விழாவாக கூட வைப்பார்கள். ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை ஆனது பெரிய அளவில் பிரசாத் ஸ்டூடியோவில் நடக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
மடாதிபதிகள், குருக்கள், ஆன்மீகவாதிகள், சாமி பாடலை பாடுபவர்கள் என இவர்களை எல்லாம் அழைத்தும் பெரிய அளவில் அன்னதானம் வைத்தும் நடுவில் அம்மன் சிலையை வைத்தும் இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இந்த பூஜைக்காகவே பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு தளத்தில் பெரிய அளவில் செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.