ரூ.23 கோடியில் சுருண்ட மூக்குத்தி அம்மன்2 - 100 கோடி போச்சா!...
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சுந்தர் சி. காதல் கலந்த காமெடி திரைப்படங்களை எடுப்பது இவரின் ஸ்டைல். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பக்தி, ஹாரர், காமெடி கலந்த திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கிய அரண்மனை சீரிஸ் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹீட் அடித்தது.
தற்போது முழுக்க முழுக்க ஆன்மிகத்தை மையமாக வைத்து சுந்தர்.சி இயக்கிய திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்தார். இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சுமார் ரூ.90 முதல் 100 கோடி பட்ஜெட்டில் ஐசரி கணேசன் தயாரித்திருந்தார்..
தீபாவளியை முன்னிட்டு கடந்த 6ம் தேதி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானபோது அதில் இடம் பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். அதன்பின் அதை படக்குழு சரி செய்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் படம் வெளியான பின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரசிகர்களை கவராமல் போனது. படத்தின் கதை, திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லை என்பதால் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தற்போது படம் வெளியாகிய 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.23.65 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் ரூ.20.49 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த படத்தை தயாரித்த ஐசரி கணேசனுக்கு ரூ.80 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம் என சொல்கிறார்கள்.
