Categories: Cinema News latest news throwback stories

மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் இந்த பிரபலத்தின் உண்மை கதையா… பாவம் தான்..

கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி இருந்த மூன்றாம் பிறை படத்தின் கிளைமேக்ஸ் ஒரு இயக்குனரின் உண்மை சம்பவம் என்பது தெரியுமா?

தமிழ் சினிமா இயக்குனர்கள் என லிஸ்ட் கேட்டால் முதல் வரும் சில பெயர்களில் இடம் பெற்றுவிடுவார் பாலுமகேந்திரா. இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர். மேலும், ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சினிமாவில் அறிமுகமானார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருதும் பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

பாலு மகேந்திரா

முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். இவரின் இயக்கத்தில் வெளியான படம் தான் மூன்றாம் பிறை. கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவான படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இதன் கிளைமேக்ஸில் ரயிலில் சென்ற ஸ்ரீதேவியை கமல் பார்க்க வைக்க செய்த காட்சி இன்றும் புகழ் பெற்றதாக இருக்கிறது.

மூன்றாம் பிறை

பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி நடிகை ஷோபா. இவர்களுக்கு திருமணம் ஆன சில காலத்தில் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பாலு மகேந்திரா காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், ஷோபாவின் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாக ஒரு மலையாள பேட்டியில் பாலுமகேந்திரா தெரிவித்து இருக்கிறார். அந்த வலியின் ஒரு துளி தான் மூன்றாம் பிறை படமாக மாறியதாகவும் தெரிவித்து இருக்கிறாராம்.

Published by
Shamily