×

செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ்க்கு அதிக ஆதரவு…. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பல்டி!

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் ஈபிஸ் பனிப்போர் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வரப்போகும் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று 5 மணிநேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஈபிஎஸ்க்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் முன்னால் ஓபிஎஸ்கு ஆதரவாக இருந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூட ஈபிஎஸ்க்கே ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த ஒரே மூத்த தலைவர் பன்ரூட்டி ராமச்சந்திரன் என சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு கட்சியில் அந்த அளவுக்கு செல்வாக்கு கிடையாது என சொல்லப்படுகிறது.

இதனால் அதிமுக கட்சியில் ஆட்சியிலும் ஈபிஎஸ் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெரும் ஆதரவை பெற்று வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News