×

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரானா பாதிப்பு - கலக்கத்தில் பொதுமக்கள்

தமிழகத்தில் நேற்றுவரை 2162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மட்டும் 104 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 

இந்நிலையில், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்த எண்ணிக்கை 2323ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 27 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை. 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News