
latest news
Karur: கரூரில் விஜய் பரப்புரை!.. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று அங்கு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார். திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதலில் சென்றார். போன வாரம் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார்.
இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு சென்றார். இன்று மதியம் நாமக்கல்லுக்கு சென்று அங்கு நிமிடங்கள் மக்கள் முன்பு பேசினார். அவர் செல்லும் வழியங்கும் கூட்டம் அலைமோதியது. அவரை எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என பலரும் காத்திருந்தனர்.
பெண்கள் வர வேண்டாம், கர்ப்பிணி பெண்கள் வர வேண்டாம், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாம் என என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் யாரும் அதைக் கேட்கவில்லை. நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த விஜய் இன்று மாலை கரூர் சென்றார். அங்கும் அவரைப் பார்க்க பல கூட்டம் அலைமோதியது.
மணிக்கணக்காக பலரும் காத்திருந்தனர். விஜய் வந்தபோது அவரை பார்ப்பதற்காக கூட்டம் முண்டியடித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கம் அடைந்தனர். எனவே ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 10 பெண்கள் உட்பட 31 பேர் வரை உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.