×

மகன்கள் முன் தாயை கூட்டு வல்லுறவு – கணவர் செய்த கொடூரம்!

கேரளாவில் கணவரே தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவில் கணவரே தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணையும், அவரது இரண்டு மகன்களையும் கணவர் நண்பர்கள் வீட்டுக்கு சுற்றுலா என்று சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற போது அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்கவைத்தும் கணவரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மேலும் அவரது உடலில் சிகரெட்டால் சுட்டும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இது அனைத்தும் அந்த பெண்ணின் குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

இதனால் அந்த பெண் மயக்கமடைய அவரை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து வெளியேறி இளைஞர் ஒருவரின் உதவியால் போலீஸார் மற்றும் ஊடகங்களுக்கு தனக்கு நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் உள்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News