×

தாய் தந்தை தல…. நடிகரின் கையைப் பார்த்து கடுப்பான அஜித்!

நடிகர் ஒருவர் தன் கையில் அஜித் பெயரைப் பச்சை குத்திக்கொண்டு சென்று அவரிடம் காண்பித்துள்ளார்.

 

நடிகர் ஒருவர் தன் கையில் அஜித் பெயரைப் பச்சை குத்திக்கொண்டு சென்று அவரிடம் காண்பித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எந்த அளவுக்கு வெறித்தனமான முட்டாள் ரசிகர்கள் என்றால் தான் விரும்பும் கதாநாயகனின் பெயரை தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்ளும் அளவுக்கு கூட சிலர் செல்கின்றனர். இதுபோல ரசிகர் ஒருவர் அஜித்திடம் தன் கையில் உள்ள டாட்டூவைக் காட்ட கடுப்பாகியுள்ளார் அஜித்.

பகல் நிலவு என்ற விஜய் டிவி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகர் ஜெமினி. இவர் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். இதனால் தனது கையில் தாய் தந்தை தல எனப் பச்சைக் குத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அதை அஜித்திடமே காட்டியுமுள்ளார். தன்னை பாராட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் அதைப் பார்த்து கடுப்பான அஜித் உடனடியாக அதை வலியில்லாமல் ஏதாவது மருந்து போட்டு அழித்து விடுங்கள். நிறையப் பேர் இப்படி செய்கிறார்கள் எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது எனக் கூறி கண்டித்ததாக அவரே சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News