×

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அம்மா-மகள் நடிகை!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’சுருளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த புராஜெக்டில் அம்மா மகள் நடிகை நடித்து உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு விளம்பரப் படத்தை போத்தீஸ் நிறுவனத்திற்காக இயக்கி உள்ளதாகவும் இந்த விளம்பரப் படத்தில் நடிகை லிசி மற்றும் அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷினி ஆகிய இருவரும் நடித்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் கூடிய உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகிஉள்ளது 

நடிகை லிசி ஏற்கனவே கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பதும் அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனி, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்தவர் என்பதும் தற்போது சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அம்மா மகள் ஆகிய இருவரும் இணைந்து நடித்த இந்த போத்தீஸ் விளம்பரம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் பெண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் விரைவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News