×

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு – ரசிகர்களுக்கு ராஜமௌலி அறிவுரை !

ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

 

பாகுபலி1 மற்றும் 2 ஆகிய பாகங்களின் மூலம் மூலம் இந்திய அளவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி. அந்த படத்துக்கு பின் அவர் இயக்கி வருமே படமே ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் நடித்து வருகின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் சங்கராந்தி மற்றும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை இந்தப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போன்றவைகளை வைக்கக் கூடாது என ராஜமௌலி வேண்டுகோள் வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News