"பிரைவசி கொடுங்கள்" - விவாகரத்துக்கு மௌனி ராய் கிரீன் சிக்னல்!
மௌனி ராய்:
பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நட்சத்திர ஹீரோயின் அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை மௌனி ராய். ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதே சீரியல் தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது .
இதனிடையே இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் சூரத் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். துபாயை சேர்ந்த இந்த நபர் தொழிலதிபராக இருந்து வந்தது குறிப்பிடுத்தக்கது. சீரியலைத் தொடர்ந்து மௌனி ராய்க்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க அதிலும் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .
விவாகரத்து வதந்தி:
மௌனி ராய் சூரஜ் நம்பியார் இருவரும் சிறந்த காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆம் அதாவது இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியானது.
அதை நிரூபிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் கணவரை அன்பாலோ செய்ததோடு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இதனால் கணவரை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் நேற்று முழுக்க தீயாய் பரவியது.
மௌனி ராய் பதில்:
இந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்திருக்கும் நடிகை மௌனி ராய் "எங்களுடைய பிரைவசிக்கு மதிப்பு கொடுங்கள்" என பதில் அளித்திருக்கிறார். அவரின் இந்த பதில் விவாகரத்துக்கு கிரீன் சிக்னல் காட்டுவது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
