Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

‘கர்ணன்’ வேற லெவல் வெறித்தனம்!…. தனுஷுக்கு அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட்…

‘கர்ணன்’ வேற லெவல் வெறித்தனம்!…. தனுஷுக்கு அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட்…

14a5eec4db10c700eb39161e76a84084

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 

இந்நிலையில், இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. அதேநேரம், திரைப்படத்தை பிரச்சார நெடியாக இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கான கலையை மாரி செல்வராஜ்  அழகாக கையாண்டுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். படத்தின் கதையும்,திரைக்கதையும், நடிகர்கள் தேர்வும், நடிகர்களின் நடிப்பும், இசையும் சரியான கோணத்தில் பயணித்து சிறப்பாக அமைந்துள்ளதாக் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

77696ab3baefb5652a19f63c1a71a898

இப்படத்திற்கு தியேட்டர்கள் சிறப்பான ஒப்பனிங் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். தனுஷ் நடிப்பில் மிரட்டியிருப்பதாகவும், மாரி செல்வராஜ் வேற லெவல் இயக்கம் எனவும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்குவார் எனவும் பாராட்டி வருகின்றனர்.

முதல் பாதி நேர்மறையான சிந்தனைகளை மனதில் விதைப்பதாகவும், இரண்டாம் பாதி செண்டிமெண்ட், எமோஷனல் கலந்த கலவையாக மனதை உருக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top