Connect with us

Cinema News

ஒரே கதை!.. சிவாஜிக்கு ஹிட்டு.. எம்.ஜி.ஆருக்கு அட்டர் ஃபிளாப்.. எந்த படம் தெரியுமா?

சினிமாவில் பழைய காலக்கட்டம் முதலே செண்டிமெண்ட் திரைப்படங்களுக்கு என ஒரு வரவேற்பு உண்டு. அதிகப்பட்சம் செண்டிமெண்ட் திரைப்படங்களில் கதாநாயகன் இறப்பது போன்ற க்ளைமேக்ஸ்கள் அமையும். அது ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதால் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

டி.ராஜேந்தர் திரைப்படங்களில் அதிகப்பட்சம் சோக முடிவுகளோடுதான் படம் முடியும். இருந்தாலும் அவரது திரைப்படங்கள் நல்ல ஹிட் கொடுக்கும். அதே போலதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் நடக்கும். நாடகங்களில் நடித்து வந்த காலக்கட்டம் முதலே சிவாஜி கணேசன் சோக முடிவுகளை கொண்ட கதைகளில் நடித்துள்ளார்.

mgr
mgr

நாடகத்தில் சிவாஜி நடிக்கும்போது அதில் பிரபலமான தங்கை நாடகம் ஒன்று இருந்தது. பொதுவாகவே தங்கை செண்டிமெண்ட் என்பது சிவாஜிக்கு நல்ல ஹிட் கொடுக்கும். எனவே அந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் அந்த கதையின் இறுதியில் சிவாஜி கணேசன் இறந்துவிடுவார்.

சிவாஜி கதையில் நடித்த எம்.ஜி.ஆர்:

அப்போதைய காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்து வந்துக்கொண்டிருந்தார். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவாஜியிடம் சம்மதம் பெற்று அதை படமாக்கி நடித்தார் எம்.ஜி.ஆர்.

 1952 இல் இயக்குனர் நாராயண மூர்த்தி இயக்கத்தில் என் தங்கை என்கிற பெயரில் படமாக வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எம்.ஜி.ஆர் சாவது போல் உள்ள க்ளைமேக்ஸை மக்கள் ஏற்றுக்கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் அதிகமாக சோக முடிவுகள் கொண்ட கதையிலேயே நடிக்கவில்லை. அதற்கு இதுவே காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிவாஜி,ரஜினி, கமல் எல்லோருக்கும் ப்ளாப்.. விஜயகாந்துக்கு மட்டும் ஹிட்டு – விஜயகாந்த் செய்த சாதனை!..

Continue Reading

More in Cinema News

To Top