அதிக லைக்ஸ் குவிக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் 'மல்லிகை மொட்டு' பாடல்!

 
Mr Bhaarath malligai mottu

கோலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது 'G Squad' நிறுவனத்துடன் இணைந்து 'பேஷன் ஸ்டுடியோஸ்' சுதன் சுந்தரம், 'தி ரூட்' ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம் தான் 'மிஸ்டர் பாரத்'.

இதில் ஹீரோவாக பாரத் நடிக்க, அவருக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர்ராஜன், ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ளார், பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார், ஓம் நாராயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், இதன் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் 'மல்லிகை மொட்டு' வெளியாகி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

From Around the web