
latest news
பலே கில்லாடி தான் எம்.ஆர்.ராதா!..சம்பளத்தை லம்பா அள்ள அவர் போட்ட திட்டம்!..பலிச்சுச்சா?இல்லையா?
Published on
By
தமிழ் திரையுலகின் பிரம்மாக்களாக கருதப்படுபவர்களில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் ஒருத்தர். நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராக பெரும் புகழைப் பெற்றவர். தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையால் சமூக கருத்துக்களை முன் நிறுத்துபவர்.
தனது முற்போக்குக் கொள்கைகளால் அனைவரையும் ஈர்த்தவர். சாதி, சமயம், தீண்டாமை இவைகளை அறவே வெறுப்பவர் எம்.ஆர்.ராதா. இதை தன் படங்களின் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர் முதன் முதலில் அறிமுகமான படம் அவருக்கு வாய்ப்புகளை தொடர்ச்சியாக தரவில்லை. அடிப்படையிலேயே நாடக கலைஞராக இருந்த எம்.ஆர்.ராதா ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.அந்த வகையில் அரங்கேறியது தான் இரத்தக்கண்ணீர் நாடகம்.
இதையும் படிங்க : சாப்பாட்டிலும் சமத்துவம் பார்த்த எம்.ஆர்.ராதா!..அம்மாவின் செய்கையால் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம்!..
இந்த நாடகத்திற்காக அவர் போட்ட மெனக்கிடுதல் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த நாடகத்தை படமாக்க விரும்பினார் பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியார். எம்.ஆர்.ராதாவிடம் போய் பெருமாள் முதலியார் கேட்க ‘ இந்த நாடகத்தை படமாக்க எனக்கு சில நிபந்தனைகள் இருக்கு, அதை செய்தால் தான் நான் சம்மதிப்பேன்’ என கூறினாராம். பெருமாள் முதலியாரும் எல்லாவற்றிற்கும் துணிந்து தான் எம்.ஆர்.ராதாவிடம் வந்தார். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த இரத்தக்கண்ணீர் நாடகம் பெரும் புகழை பெற்று விளங்கியிருந்தது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எம்.ஆர்.ராதா அந்த காலத்தில் நடிகர், நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்தவர் கே.பி.சுந்தரம்மாள். அவர் அப்போது ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். இந்த நாடகத்தை எடுக்க வேண்டுமென்றால் கே.பி.சுந்தரம்மாளை விட 25000 ரூபாய் அதிகமாக 125000 ரூபாய் சம்பளமாக தரவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். ஆனால் பெருமாள் முதலியாரோ எல்லாத்துக்கும் தயாராக தான் வந்தார். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முன்வந்தார். படமும் வெளியாகி அமோக வெற்றிக்கனியை பறித்தது.
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இட்லி கடை. படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க…...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...