Connect with us

Cinema News

மனைவி மீது உள்ள காண்டை டப்பிங்கில் காட்டிய எம்.எஸ்.பாஸ்கர்.. அதுக்குனு இவ்வளோ ஓபனாவா பேசுறது

எம்.எஸ்.பாஸ்கர் என்றாலே பலருக்கும் நியாபகம் வருவது சின்ன பாப்பா, பெரிய பாப்பா பட்டாபியை தான். எப்போதுமே துறுதுறுவென நடிப்பில் சக்கை போடு போடும் அவர் சமீபகாலமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று இருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் பிஸியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஒருமுறை செய்த தரமான சம்பவம் குறித்து இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்யும் போது தமிழில் சிலர் பேசும்போது ரொம்ப சுவாரஸ்யமாக தான் இருக்கும். அப்படி ஹாலிவுட்டில் பிரபல சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேன் படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார் பாஸ்கர்.

ஸ்பைடர்மேனின் முதலாளி வேடம் எப்போதுமே ஸ்பைடர்மேனை திட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கும். அந்த வேடத்திற்கு தமிழ் டப்பிங் பேசியது எம்.எஸ்.பாஸ்கர்தான். சும்மாவே லோக்கலாக பேசி காமெடி செய்வதில் செம கில்லாடியானவர் பாஸ்கர். இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தபோது தனது மனைவிக்கூட சண்டையிட்டு வந்திருக்கிறார். அந்த கோபத்திலேயே டப்பிங் ஸ்டுடியோ வந்தவர் அந்த சூட்டுடனே பேசவும் தொடங்கி இருக்கிறார்.

ஒரு காட்சியில் அந்த முதலாளி வேடத்திற்கு தொலைப்பேசி அழைப்பு வரும். அதை எடுத்து பேசிவிட்ட உதவியாளர் இவரிடம் வந்து “சார் நீங்க வீட்டில் போட்டிருக்க புது மொசைக் கல் நல்லா இல்லன்னு உங்க வைஃப் சொல்றாங்க” என்பார். அதற்கு முன்கூட்டியே எழுதிய டயலாக்கினை விட்டு எம்.எஸ்.பாஸ்கர் அவர் மனைவி மீது இருந்த கடுப்பினை காட்டினாராம். அந்த டயலாக், “நல்லா இல்லன்னா அவ மூஞ்ச வச்சு தேய்க்க சொல்லு” என்ற வசனத்தை சொறுகி இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட ஏலியன் படத்திற்கு வந்த சிக்கல்… உதவி கேட்டு வந்த தயாரிப்பாளருக்கு “நோ” சொன்ன சிவகார்த்திகேயன்…

இதனை சுற்றி இருந்தவர்கள் கேட்டு விட்டு என்ன பாஸ்கர் சார் வீட்டில் மனைவியுடன் டிஷ்யூமா என காமெடியாக கேட்டதாக எம்.எஸ்.பாஸ்கர் பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் மகளும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top