Categories: latest news throwback stories

உங்க படத்திற்கு இசையமைக்க முடியாது!..காரணம் கேட்ட எம்ஜிஆரை மூக்குடைத்த எம்.எஸ்.வி!..

அந்த காலங்களில் இசையில் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. எம்ஜிஆரின் வெற்றிப்படங்களுக்கு எம்.எஸ்.வியின் பாடல்களும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் சேது மாதவன் இயக்கத்தில் எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த படம் ‘ நாளை அமைதே’ திரைப்படம் ஆகும். இந்த படம் ஹிந்தியின் ரீமேக் ஆகும்.

ஹிந்தியில் இந்த படம் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆகவே முதலில் சேதுமாதவன் எம்ஜிஆரிடம் இந்த படத்தை பற்றி சொல்லும் போது முதலில் எம்ஜிஆர் மறுத்திருக்கிறார்.அதன் பின் சேதுமாதவன் மீது பேரன்பு கொண்டவராக இருந்ததால் அவர் பேச்சை மீற முடியாமல் படத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க : தளபதி படத்தில் என்னால் நடிக்க முடியாது… நோ சொன்ன மம்முட்டி… ஆனா ஒரு ட்விஸ்ட்…

ஆனால் இந்த படம் இசையை மையமாக வைத்து தயாராக இருப்பதால் நடிப்பதற்கு முன் ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் எம்ஜிஆர். என்னவெனில் படத்திற்கு எம்.எஸ்.வி தான் இசையமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.இதை சேதுராமன் எம்.எஸ்.வியிடம் கூறியபோது இசையமைக்க முடியாது என கூறியிருக்கிறார்.

இதை அறிந்த எம்ஜிஆர் தொலைபேசியில் அழைத்து எம்.எஸ்.வியிடம் என்ன காரணம் என்பதை அறிந்திருக்கிறார் எம்ஜிஆர். எம்.எஸ்.வி சொன்ன பதிலோ எம்ஜிஆருக்கு ஆச்சரியத்தை தந்தது. என்னவென்றால் நான் இசையமைக்கும் பாடலுக்கு உங்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் நான் இந்த படத்திற்கு இசையமைக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லா பாடலிலும் தலையிடுவது எனக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கின்றன என கூறியிருக்கிறார்.

அதற்கு எம்ஜிஆர் இதுவரை அமைந்த பாடல்கள் எல்லாம் வெற்றிப் பாடல்களாக தானே வந்திருக்கின்றன. அதில் என்னுடைய தலையீடு இருக்கத்தான் செய்தன. இப்பொழுது மட்டும் ஏன்?என கேட்டு சரி நேரில் வந்து பேசு என சொல்லி தொலைபேசியை வைத்துவிட நேரில் வந்த எம்.எஸ்.வி எம்ஜிஆரை முகத்திற்கு நேராக சந்தித்து முடியாது என சொல்ல முடியாமல் முன்பணத்தொகையை பெற்றுக் கொண்டு படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம். இந்த சுவாரஸ்யமான பதிவை ஒரு சமயம் பேட்டியின் போது சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini