
Cinema News
நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..
Published on
By
பெரிய பெரிய வாழ்க்கை தத்துவங்களையும், அறிவுரைகளையும் எளிமையான வார்த்தைகளால் பாடல்கள் மூலம் மக்களுக்கு புரியும்படி சொன்னவர் கண்ணதாசன், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கண்ணதாசன் காதலை எழுதினால் காதுலுக்கே அது மகுடம், கண்ணீரை எழுதினால் அது சோகத்தின் உச்சம், தத்துவம் சொன்னால் அதுவே வாழ்வின் நியதியாக இருக்கும்.
50,60 களில் தமிழ் திரையுலகில் பல பாடல்களை எழுதியவர். எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் இணைந்தால் அவ்வளவு அழகான பாடல்கள் உருவாகி ரசிகர்களுக்கு கவிதை விருந்தாக அமையும். கண்ணதாசனின் பாடல்கள் காலத்தையும் தாண்டி இப்போது வரை பலராலும் ரசிக்கப்படுகிறது எனில் அது அவர் எழுதிய வரிகளில் இருந்த எளிமையும், ஆழமும்தான்.
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
குறிப்பாக நிஜ வாழ்வில் தான் சந்திக்கும் சூழ்நிலைகளின் பாதிப்பையும் கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் காட்டியிருந்தார். இப்படி பல பாடல்கள் உருவாகியுள்ளது. ஒருமுறை பண நெருக்கடியில் தனது அண்ணனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். ஆனால், அவர் அதை கொடுக்கவில்லை.
அப்போது பழநி படத்திற்கு பாடல் எழுதிப்போன கண்ணதாசன் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என பாடல்களை எழுதினார். இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைபப்டம் நெஞ்சில் ஓர் ஆலயம்.
இந்த படத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கப்போகும் கணவர் தனது மனைவியிடம் ‘என் மரணத்திற்கு பின் நீ மற்றொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என சொல்லுவார். இதுகேட்டு அதிச்சியில் அவரின் மனைவி பாடும் பாடல். இதுதான் சூழ்நிலை. இந்த பாடலை உருவாக்குவதற்காக எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் ஆகியோர் பெங்களூர் சென்று ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார்!.. கண்கலங்கிய கண்ணதாசன்!..
கண்ணதாசனுக்கு மதுப்பழக்கம் உண்டு. எனவே, மது அருந்திவிட்டு முதல் நாள் முழுவதும் தூங்கி கொண்டே இருந்தாராம். எம்.எஸ்.வி பொறுத்துக்கொண்டார். அடுத்தநாளும் கண்ணதாசன் வராமல் தூங்கி கொண்டே இருந்துள்ளார். இதில் கடுப்பான எம்.எஸ்.வி ‘கவிஞரின் அறைக்கு போய் யாராவது அவரை எழுப்பி கூட்டி வாங்க..இல்லனா நான் இப்பவே ஊருக்கு கிளம்புறேன்.. குடிகாரன் கூட வந்தா இதுதான் நடக்கும்’ என கத்திவிட்டாரம்.
அப்போது கண்ணதாசனின் அறை சட்டென திறந்து அவர் வெளியே வந்தார். எம்.எஸ்வி கத்தியது அவருக்கு கேட்டுவிட்டதா என எல்லோருக்கும் அதிர்ச்சி. ‘சொன்னது நீதானா விசு?’ என கண்ணதாசன் கேட்க விசுவோ ‘அது நான் இல்லை.. அது வந்து’ என இழுக்க, ‘சொன்னது நீதானா.. சொல் சொல் என் உயிரே’ இதுதான் பல்லவி. இதற்கு போய் மெட்டுப்போடு வந்து விடுகிறேன் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் வந்தமர்ந்த கண்ணதாசன் முழுப்பாடலையும் எழுதி கொடுத்தாராம்.
இதையும் படிங்க: கண்ணதாசன்-எம்.எஸ்.வி-டி.எம்.எஸ் இடையே வந்த போட்டி: ஸ்கோர் செய்த சிவாஜி
தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில்...
Dude: லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருப்பவர் பிரதீப்...
Karuppu: ரேடியோ தொகுப்பாளராக இருந்து சுந்தர்.சி கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன...
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின்...
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...