Categories: Cinema News latest news

விக்கிபீடியாவால் முனிஸ்காந்த் திருமணத்துக்கு வந்த சோகம்… அடே என்னங்கடா இப்படி பண்ணுறீங்க…

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக நடித்து வரும் முனிஸ்காந்த் திருமணத்துக்கு வலைத்தளமான விக்கிபீடியாவால் மிகப்பெரிய சோதனையை சந்தித்தாராம். அதை அவர் எப்படி சரி செய்தார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்று கோயம்பேடு வந்திறங்கியவர்களில் முனிஸ்காந்தும் ஒருவர். சிறுசிறு வேடங்கள் நடித்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் முதலில் கிடைக்கவில்லை. இதனால் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். கஷ்ட ஜீவனத்தில் தான் பிழைத்து வந்தார்.

முனிஸ்காந்த்

 இவரின் நடிப்புக்கு தீனி போட்ட முதல் அடி குறும்படங்கள் தான். விஜய் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் நிறைய பேரின் அறிமுகம் முனிஸ்காந்திற்கு கிடைத்தது. ராமதாஸ் என்ற உண்மையான இவர் பெயர், முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனீஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தப்பின்னர் முனிஸ்காந்த் என அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு நடிகர் காளி வெங்கட்டிடம் கிடைத்த அறிமுகம் பெரிய வாய்ப்பை வாங்கி கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை. அவர் தான் முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் இவருக்கு முக்கிய வேடம் வாங்கி கொடுத்தார்.

இதனையடுத்து கடல், சூது கவ்வும், பீட்டா 2 , வில்லா, பசங்க 2, 144, மாநகரம், மரகத நாணயம், ராட்சசன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் அலட்டல் இல்லாத உடல்மொழிக்கே ரசிகர்கள் ஏராளம். தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தினை பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

முனிஸ்காந்த்

இவர் திருமணத்துக்கு பெண் தேடி வீட்டில் பேசி முடித்தனர். இவரின் மனைவி தனது வருங்கால கணவர் குறித்து அறிந்து கொள்ள விக்கிபீடியாவில் அவரின் பக்கத்தை பார்க்க முடிவு செய்கிறார். அதன்படி, அப்பக்கத்தினை பார்த்தவருக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். காரணம் முனிஸ்காந்தின் வயது 50க்கு மேல் என போடப்பட்டு இருந்ததாம். இதில் ஷாக்கான அவர் முனிஸ்காந்திற்கு கால் செய்து என்ன இப்படி எனக் கேட்க அவருக்கும் ஷாக்காம். அய்யய்யோ எனக்கு வயது 37 தான் எனக் கூறி தனது பள்ளி டிசியை காட்டிய பிறகே அவருக்கு நம்பிக்கை வந்ததாம்.

தொடர்ந்து தான் கஷ்டகாலத்தில் படுத்திருந்த வடபழனி கோயிலில் மனைவி தேன்மொழியை கடந்த 2018ம் ஆண்டு கைப்பிடித்தார்.

 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily