Connect with us

Cinema News

முரளி காதல் கதையும் குஷி படமும் ஒன்னா? கல்யாணம் விஷயத்தினை அப்பாவிடமே மறைத்த அம்மா… அடடே!

Murali: தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி.  ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் முரளியை காதல் நாயகனாகவே ரசிகைகள் ரசித்த காலமும் இருந்தது. அப்படிப்பட்ட முரளையின் காதல் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் குஷி படத்தை ஒட்டியதாகவே அமைந்திருந்ததாக ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 1980களில் நடிக்க வந்தவர் முரளி. இருந்தும் அவர் கேரியரில் 10 வருடங்கள் கழித்து வெளியான இதயம் திரைப்படம் தான் அவருக்கு பெரிய புகழை வாங்கி கொடுத்தது. கிட்டத்தட்ட அவர் பெயரையே இதயம் முரளி என ரசிகர்கள் அழைக்கும் விதம் அப்படத்தில் நடித்திருப்பார். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்தில் கூட அவரது காதல் நிறைய சுவாரசியங்களை கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: மணிரத்னத்தை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்!.. கமலோட வில்லன் கேரக்டருக்கும் ரஜினிக்கும் தொடர்பு?..

குஷி படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் தங்களுடைய நண்பர்கள் காதலுக்கு தூது சென்ற போது தான் பார்த்துக் கொள்வார்கள். அது போலவே நடிகர் முரளி தன்னுடைய நண்பர் கந்தாவின் காதலுக்கு காவல் இருக்கும் நேரத்தில் தான் அவரது மனைவியான ஷோபாவை பார்த்திருக்கிறார்.

நண்பர் தன்னுடைய காதலியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு காவலாக முரளி மற்றும் ஷோபனா இருவரும் வெளியில் காத்திருந்த சம்பவமும் நடந்தது. குஷி படத்தின்ம் ரிலீஸ் கூட முரளியின் பிறந்த  நாளான மே 19ஆம் தேதி தான் என்பது  குறிப்பிடத்தக்கது. பொதுவாக சினிமாவில் தயக்கத்துடன் நடிக்கும் முரளி தன்னுடைய காதலியை பார்த்த நான்கு வாரங்களில் அவருக்கு ப்ரபோஸ் செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸிடம் மட்டும் பிரச்னை செய்யும் இளையராஜா… குணா படத்தில் செய்த ஏமாற்று வேலை…

முரளியின் வயதில் அவருக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவருடைய சினிமா வாழ்க்கை பெரியதாக பாதிக்கப்படும் என்பதால் இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். இருந்தும் முரளியின் அம்மா இருவரின் காதலுக்கு முழு மனதாக சம்மதம் தெரிவித்தது மட்டுமல்லாமல் தனி ஆளாக இருந்து அந்த கல்யாணத்தை நடத்தி முடித்தாராம். இரவு எட்டு மணி வாக்கில் தான் தன்னுடைய மகனுக்கு திருமணம் முடிந்து விட்டதே அவர் தந்தைக்கு தெரியும் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top