×

பாஜக பிரமுகர் கொலை:சிக்கியக் குற்றவாளிகள்-மதமல்ல இதுதான் காரணம்!

திருச்சியில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட பாஜக செயலாளர் விஜயரகு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி மிட்டாய் பாபு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருச்சியில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட பாஜக செயலாளர் விஜயரகு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி மிட்டாய் பாபு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு. இவர் திருச்சி பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவர் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக செயலாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காலை வழக்கம் போல காந்தி மார்க்கெட் பகுதிக்கு சென்றவரை மர்ம கும்பல் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜயரகுவுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் இந்த கொலைக்கு பின்னால் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருப்பதாகவும் விஜயரகுவின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறினார். ஆனால் கொலைக்கு பின்னால் மத ரீதியிலானப் பிரச்சனை இல்லை எனக் காவல்துறை மறுத்தது. இந்நிலையில் கொலைக்குக் காரணமான மிட்டாய் பாபு மற்றும் அவரது நண்பர்களான சுடர்வேந்தன்,சச்சின் சஞ்சய் ,யாசர் ஆகியோரை நேற்று போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.

கொலைக்கான காரணமாக, மிட்டாய் பாபு விஜயரகுவின் வீட்டுக்கு அருகில் வசித்த போது அவரது மகளைக் காதலித்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகவும் அதனால்தான் கொலை நடந்தததாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News