சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்? - பரபரக்கும் தமிழ் சினிமா
Mon, 21 Dec 2020

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜயின் 65வது படத்தை இயக்கவிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் விஜய் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு அனிமேஷன் படத்தை இயக்கும் வேலையில் இறங்கியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளது தெரியவந்துள்ளது. முருகதாஸ் தயாரிப்பில் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அப்போது, முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்க விரும்புவதாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். எனவே, அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க வைகக் முருகதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு கூறிய கதையைத்தான் சிவகார்த்திகேயனிடம் அவர் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.