×

விஜய்க்கு ஜோடியாக இவரா… தளபதி 65 ல் முருகதாஸ் கஞ்சத்தனம்!

விஜய் 65 படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

விஜய் 65 படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் 65 படத்தின் பட்ஜெட்டை பெருமளவு சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறைத்துவிட்டது. இதனால் படப்பிடிப்பு மற்றும் விஜய் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து படப்பிடிப்பு நடத்த 60 கோடி ரூபாய் மட்டுமே முருகதாஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தையப் படங்களைப் போல அல்லாமல் சிக்கனமாக படப்பிடிப்பை நடத்த வேண்டிய இக்கட்டில் உள்ளார் முருகதாஸ்.

இதனால் விஜய்க்கு ஜோடியாக தமன்னாவைத் தேர்ந்தெடுத்துள்ளாராம் முருகதாஸ். ஏனென்றால் தமன்னா இப்போது பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகை. அதனால் அவருக்கு மிகக் கம்மியான சம்பளம் கொடுத்தால் போதும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இசையமைப்பாளராக வளர்ந்து வரும் தமனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News