×

முன்னணி நடிகை, நடிகர்களை வைத்து இயக்கும் முருகதாஸ்.. செம வேட்டை தான் இயக்குநருக்கு!!!

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் படுதோல்வி அடைந்தது. 
 
Kamal_Mahesh_Babu_1200x768

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து அதுவும் தெலுங்கு படம் இயக்கப் போகிறார் ஏ.ஆர். முருகதாஸ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தர்பார் படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இதுவரை தன் புதுப்படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகினார்.

இதையடுத்து முருகதாஸ் அனிமேஷன் படத்தை இயக்குகிறார் என்றும், அல்லு அர்ஜுனை வைத்து படம் பண்ணுகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும் ராம் போதினேனியை இயக்குகிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் அதை எல்லாம் முருகதாஸ் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் கமல் ஹாசனை வைத்து தெலுங்கில் படம் இயக்கப் போகிறார் முருகதாஸ் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் மற்றும் மகேஷ் பாபுவிடம் முருகதாஸ் கதை சொல்லியிருக்கிறாராம். அவர்களின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். படத்தில் மகேஷ் பாபு சிபிஐ அதிகாரியாகவும், கமல் ஹாசன் நடுத்தர வயதுக்காரராகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் கதாபாத்திரம் அமைத்திருக்கிறாராம்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் படுதோல்வி அடைந்தது. 

முருகதாஸின் கெரியரில் மோசமான தோல்வி அடைந்த படம் ஸ்பைடர் தான். இந்நிலையில் தன் ஸ்பைடர் பட ஹீரோவை வைத்தே அதுவும் அவரின் டோலிவுட்டிலேயே வெற்றிப் படத்தை கொடுத்து தன் திறமையை நிரூபித்துக்காட்ட முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News