×

கொரோனாவால் இசையமைப்பாளர் இமான் வீட்டில் உயிரிழப்பு...  

டி.இமான் வீட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துக்க சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை இசையமைப்பாளரின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார்.

 
D_Imman

டி.இமான் வீட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துக்க சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. அவர் வேறுயாம் இல்லை இசையமைப்பாளரின் தாயார் இன்று உயிரிழந்துள்ளாராம்.

கொரோனா தொற்றால் உயிருக்கும் போராடி வந்த இவர் சிகிச்சை பலனிற்றி இன்று உயிரிழந்தார். கொரோனா நோய் தொற்று ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

முதல் அலையிலேயே ஏகப்பட்ட இழப்புகள் இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், இப்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் பயங்கரமாக உள்ளது. 

மக்களும் பெரிய அச்சத்தில் உள்ளாக்கிவரும் இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் மிகவும் உருக்கமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவியுட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் டி.இமான், பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து அசதி வருகிறார். அந்த வகையில் தல அஜித், நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இவர் இசையில் வெளியான 'கண்ணான கண்ணே' மற்றும் அந்த படத்தில் வந்த, அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது.  

இந்த வெற்றிகளுக்கு கிடைத்த வாய்ப்பாக தற்போது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தன்னுடைய இனிமையான இசையால் பல ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் இமான் கூறியுள்ளதாவது மே 23 மூன்றாம் தேதி, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய தன்னுடைய தாயார், மே 25 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். 

கோமாவில் இருந்த தன்னுடைய தாயாருக்கு மருத்துவமனையில் , ICU-வில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துகொண்டு, உணர்வு பூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தி இப்படிக்கு உங்களுடைய ஒரே மகன் இமான் என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News