×

முதல்ல நீங்க திருந்துங்க: தமன்னாவின் கரி பூசிய முகத்தில் மேலும் கரியை பூசிய ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். கேடி படம் மூலம் அறிமுகம் ஆன தமன்னா விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 
 

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். கேடி படம் மூலம் அறிமுகம் ஆன தமன்னா விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். 

அமெரிக்காவில்  போலீஸாரால் தாக்கப்பட்டு சார்ஜ் பிளைட் மரணம் அடைந்த நிகழ்வு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதையடுத்து  அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உலக அளவிலும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதேவேலை இந்தியாவிலும் ஒரு துயரமான சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. இது இந்தியாவையே உலுக்கியது. பாமர மக்களிலிருந்து திரையுலகினர்,சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை தமன்னா தனது கண்டனத்தையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் முகத்தில் கரியை பூசியபடி 
உங்கள் மௌனம் உங்களைக் காப்பாற்றாது, மனிதனோ விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியமில்லையா? எந்த ஒரு படைப்பையும் அழிப்பது இயற்கை விதிகளுக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதர்களாக மாறி அன்பையும் பரிமாறி இரக்கத்தையும் வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tamannaah Bhatia
Tamannaah Bhatia

அவ்வளவுதான் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை வெளு வெளு என வெளுக்க ஆரம்பிட்துவிட்டனர்.  இதில் ஒரு ரசிகர் 
வெளிநாட்டில் வாழும் கறுப்பின மக்களுக்கு குரல் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம்தான் ஆனால் நீங்கள் உள் நாட்டில் இருக்கும் கருப்பு நிற மக்களின் மனதை பாதிக்கும் வகையில் வெள்ளை தோலை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பது ஏன்.? என கேள்வி எழுப்பியுள்ளார் இவர் மட்டுமின்றி பலரும் கேள்விகளால் தமன்னாவை வருத்தெடுத்து வருகின்றனர்..இவர் மட்டுமின்றி பலரும் கேள்விகளால் தமன்னாவை வருத்தெடுத்து வருகின்றனர்..

From around the web

Trending Videos

Tamilnadu News