வஹீதா மீது கேஸ் போட முடியாது!.. முத்துக்குமரன் போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!..
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரனை பற்றிய சர்ச்சை தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வஹிதா பேகம் முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் கூறி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதற்குப் பதிலளித்த முத்துக்குமரன், தங்களுக்குள் காதல் கிடையாது என்றும், இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகி வந்ததாகவும் விளக்கம் அளித்தார். மேலும், நாங்கள் சாதாரானமாக பேசிக்கொண்டதை தவறாக எடிட் செய்து என் பெயரை கெடுக்கிறார் என்று விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வஹிதா மீது நடவடிக்கை எடுக்கவும், வீடியோக்களை நீக்கவும் சென்னை காவல் அலுவலகத்தில் முத்துக்குமரன் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்வதற்கான போதுமான முகாந்திரம் இல்லை எனவும் இந்த வழக்கில் தீர்வு காண நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற முத்துக்குமரன், இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், பிக் பாஸ் முத்துக்குமரன் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தனக்கு உதவுங்கள் என வஹீதாவும் ஒரு போஸ்ட் போட்டு மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
