×

இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? முரளிதரன் விளக்கம்!

800 படத்திற்கு எதிரான சர்ச்சைக்கு முரளிதரன் விளக்கம்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.  

ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள முத்தையா முரளிதரன், இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினால் என் மீது தவறான பார்வை படுகிறது. அரசியல் காரணத்திற்காக தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது.

சிங்களர்கள், மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆத்கரிக்கவும் மாட்டேன் என்று 800 படத்தின் சர்ச்சை குறித்து முத்தையா முரளிதரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News