×

எனக்கு 7 வயதாக இருந்த போது என் தந்தை வெட்டி கொல்லப்பட்டார் - முரளிதரன்!

800 படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முரளிதரன்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள முத்தையா முரளிதரன், ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மலையக தமிழனாக தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அனுபவித்த இன்னல்களை குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு 7 வயதாக இருந்தபோது தன்னுடைய தந்தை வெட்டி கொல்லப்பட்டார். பலமுறை இயல்பு வாழ்க்கையை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளோம் என கூறி அந்த அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News