×

என் லைப்பில் விஜயை ஜெயிக்கணும்... அஜித் சொன்ன ஆசை... சிரித்த தளபதி

தனது வாழ்க்கையில் ஒரே லட்சியம் விஜயை ஜெயிக்கணும் என நடிகை அஜித் விரும்பியதாக விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தெரிவித்து இருக்கிறார்.
 
என் லைப்பில் விஜயை ஜெயிக்கணும்... அஜித் சொன்ன ஆசை... சிரித்த தளபதி

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகர்கள் தலயும் தளபதியும் தான். அவர்கள் படங்கள் கிளப்பும் சூடால், ரசிகர்கள் அஜித்தா, விஜயா என மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் சண்டை ரேஞ்சில் தான் இன்னும் தல - தளபதி ரசிகர்கள் சண்டை இருக்கிறது. சமாதானம் ஆகுங்க என பலரும் கெஞ்சினால் கூட இரு தரப்பும் கேட்பதாக இல்லை. இப்போவே இப்படி என்றால் 10 வருடம் முன்னர் தொடர்ந்து படங்களில் கூட இருவரும் சீண்ட கொண்ட மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, யார் ஹிட் கொடுப்பார்கள்? யார் நழுவி மாட்டிக் கொள்வார்கள் என போட்டி நிலவியது. இந்த சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸிய சம்பவத்தை விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தெரிவித்து இருக்கிறார். நானும், நடிகருமான ஸ்ரீகாந்தும் அஜித்தை சந்திக்க சென்றோம். எங்களை அழைத்து ஜூசெல்லாம் கொடுத்து உபசரித்தார். நாங்கள் விஜயின் நெருங்கிய நண்பர்கள் எனத் தெரிந்தும், என் வாழ்க்கையில் உங்கள் நண்பர் விஜயை ஜெயிக்க வேண்டும் என்பதே என் ஆசை எனக் கூறினார். இதை நாங்கள் விஜயிடம் கூறினோம். அவர் சிரித்துவிட்டு, இதை சொல்லக்கூட எவ்வளவு தைரியம் வேண்டும் எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News