×

என் மகள் மருமகனுடன் நடிக்க மறுத்துவிட்டாள்... காரணம் சொல்லும் அர்ஜூன்

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, துருவ் சர்ஜாவுடன் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 
 

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் தங்கை மகன் துருவ் சர்ஜா ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகும் படம் செம திமிரு. இந்தப் படம் இன்று வெளியாக இருக்கிறது. படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். 


படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அர்ஜூன் பேசுகையில், ``துருவா என் தங்கச்சியோட மகன். அவரும் எனக்கு மகன் மாதிரிதான். துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சார்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடல்திறன், கராத்தே, பாக்ஸிங், மும்பையில் நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனால், அவர் எங்களை விட்டுட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம்.

சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்த காலகட்டத்துல, துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து வளர்ந்திக்கிறார்.

கடந்த ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட். நிறைய படங்கள் நடிக்கணும்கிறதை விட நல்ல படங்கள் நடிக்கணும்கிறதுல உறுதியா இருக்கார். பணம் சம்பாதிக்கிறதைவிட பெயரைச் சம்பாதிக்கணும்கிற எண்ணம் இருக்கு. அதுக்காக ரொம்பவே அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் பண்றார்.

என்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு துருவா முறைப்பையன் என்பதால் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினேன். இதை என் மகளிடம் சொன்னபோது கோபித்துக் கொண்டாள். துருவாவும், நானும் சகோதரன், சகோதரியாக பழகி வருகிறோம். நாங்கள் எப்படி சேர்ந்து நடிக்க முடியும் என்று கூறிவிட்டாள். இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படி முற்போக்காக சிந்திக்கிறார்கள் என்று நினைத்து வியந்து போனேன்’’ என்று ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News