என் அம்மா விசித்திரமானவர்.... RJ பாலாஜி கூறிய சம்பவங்கள்!
ரேடியோ ஜாக்கியாக தனது பணியை தொடங்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆர்.ஜே பாலாஜி அதன் பிறகு நடிகர் இயக்குனர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்த பிரபலமாக தற்போது தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார்.
இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் கருப்பு . இந்த திரைப்படம் அமோக வசூல் ஈட்டி பெரும் சாதனையை படைத்து வருகிறது. இந்த நிலையில் நீங்கள் இப்படி காமெடியாக பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் என்ன காரணம்? எங்கிருந்து இதெல்லாம் வந்தது? என சமீபத்தை பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கேட்டதற்கு பதில் அளித்த ஆர் ஜே பாலாஜி.....

இது அனைத்துமே என்னுடைய அம்மாவிடமிருந்து வந்தது தான். என் அம்மா மற்ற அம்மாக்களை விட கொஞ்சம் வித்தியாசமானவர் விசித்திரமானவர். சாவு வீட்டுக்கு போனா கூட அங்க அழுகுறவங்கள பார்த்து காமெடி செய்பவர். அந்த அளவுக்கு ஹியூமர் சென்ஸ்.
அது மட்டும் இல்லாமல் நாளைக்கு எக்ஸாம் இருக்குது என்று நான் சொன்னால் சரி இருக்கட்டும் வா படத்துக்கு போகலாம் என்று கூப்பிடுவார். எப்படியும் நீ பெயில் ஆகத்தான் போற என்பார். அந்த அளவுக்கு மற்ற அம்மாக்களை விட என்னுடைய அம்மா மாறுபட்டவர். அதனால் தான் அவரிடம் இருந்து தான் எனக்கு அனைத்துமே வந்தது என ஆர் சி பாலாஜி தெரிவித்துள்ளார்.
