Categories: Cinema News latest news

ஒரே நேரத்தில் 2 படம்!. அஜித் இப்படி வேலை பார்க்க காரணமே இதுதானாம்!.. பக்கா ஸ்கெட்ச்!..

அஜீத் ஒரே நேரத்துல ரெண்டு படங்களிலும் நடித்து வருவது மிகப்பெரிய ஆச்சரியம். அஜீத் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இது பெரிய ஆச்சரியம். இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

அஜீத் விழுந்து அடிச்சி எல்லாம் ஒரு வேலையை செய்ய மாட்டாரு. அது அவசியமில்லாத விஷயம். ஒரு படத்துக்கு ஹீரோ 60 நாள் கால்ஷீட் கொடுத்தா அதுக்குள்ள நடிக்கணும். அதுக்காக நைட் அண்ட் டே நடிச்சிக் கொடுக்கணும்னுலாம் அவர் ஒருபோதும் இருந்தது இல்ல. ஆனா இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் 2 சூட்டிங் நடக்குது. காலைல வந்தாருன்னா ஈவ்னிங் வரை நடக்குது.

vidamuyarchi

அப்புறம் 4 மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு இன்னொரு படத்துக்குப் போய் சூட்டிங்ல கலந்துக்கிடறாரு. இது மிகப்பெரிய ஆச்சரியம். உண்மையிலேயே மனதாரப் பாராட்டலாம். ஏன் இவ்வளவு வேகத்துல பண்றாங்கன்னா அதுக்கு தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு தான்.

அக்டோபர் முடியறதுக்குள்ள யார் யார்லாம் சூட்டிங்ல இருக்கிறீங்களோ அவங்க எல்லாம் முடிச்சிருங்கன்னு சொல்றாங்க. நவம்பர்ல இருந்து பெரிய ஸ்டிரைக் இருக்குதாம். பெப்ஸி வேலை செய்யாது. அதுக்குள்ள பிரச்சனை தீராது. நடிகர்களும் இந்த முறை இறங்கிப் போறதாக இல்லை. ஆக பெரிய போர் நடக்க வாய்ப்பு இருக்கு.

அப்படின்னா இந்தப் படத்தை விரைவில் முடிக்கலைன்னா நாளைக்கு மாட்டிக்குவாங்க. அதனால அஜீத் வழக்கத்தை விட இதை எல்லாம் கருத்தில் கொண்டு வேலை பார்க்கிறார். ரெண்டு தயாரிப்பாளர்களும் அஜீத் மேல நம்பிக்கை வச்சிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜீத்துடன் அர்ஜூன், திரிஷா, ரெஜினா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதே போல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. அஜீத்துடன் இணைந்து பூஜா ஹெக்டே, ரகுல் ப்ரீத்திசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v