×

என் இனிய கணவர்... ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். அதன்பின் பின்னணி பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளரான அவர் பென்சில் மற்றும் டார்லிங் திரைப்படங்கள் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த சைந்தவிக்கு கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டின் ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சைந்தவி - ஜிவி பிரகாஷ் தம்பதி தங்களது 7வது திருமணநாளை நேற்று கொண்டாடினர். இதுகுறித்து பதிவிட்டுள்ள சைந்தவி...

அதில், அன்பான கணவர் ஜிவி'க்கு 7வது திருமண நாள் வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது வைத்துள்ள என் அன்பு மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.  .நான் கர்ப்பமாக இருந்தபொழுது  நீங்கள் முழு அக்கறையும்,  பாசமும் காட்டி கவனித்துக்கொண்டீர்கள். நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, உங்கள் மீது வைத்துள்ள என் காதல்  இன்னும் அதிகரிக்கிறது.

 நீங்களும் நம்  சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த விஷயம். இன்னும் இதோபோன்ற  பல அழகான நினைவுகளை ஒன்றாக சேர்ந்து எப்போதும் உருவாக்குவோம்  ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார். இந்த அழகான தம்பதிக்கு வனிதா, கிகி விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News