×

என் இளம் மகனே... மருமகன் இறப்பில் இருந்து மீளாத துயரத்தில் நடிகர் அர்ஜுன்!

நடிகர் அர்ஜுனின் அக்கா மகனான நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) ஜூன் 7ம் தேதி தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மனைவியும் தமிழ் நடிகையுமான மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.

 

இந்நிலையில் சிரஞ்சீவியை இழந்து வாடும் அவரது மாமா நடிகர் அர்ஜுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் இளம் மகனே, நீ மனசு கஷ்டப்பட்டு அல்லது கோபம் அடைந்து யாருடனும் பேசாமல் இரண்டு நாட்களுக்கு எங்காவது சென்றால் அது வேறு. ஆனால் நீயோ திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று எங்களை எல்லாம் தண்டித்துவிட்டாய்.

நான் எப்பொழுது என் கண்களை மூடினாலும் உன்னுடைய சிரித்த முகம் தான் தெரிகிறது. ஒரு சில நாட்களில் நாங்கள் உன்னை மறந்துவிடுவோம் என்று நீ நினைத்தால் அது தவறு. உன் மரணத்தால் எங்களுக்கு ஏற்பட்ட காயம் என்றுமே ஆறாது. நீ என்றுமே எங்கள் இதயங்களில் இருப்பாய்.

உன் தாத்தா உனக்கு சிரஞ்சீவி என்று பெயர் வைத்தார். அது என்றுமே உண்மையாக இருக்கும். உன் வார்த்தைகள், சிரிப்பு, நினைவுகள், நம் சொந்தம் என்றுமே நிலைத்து நிற்கும். இந்த இழப்பை தாங்க கடவுள் தான் உங்களுக்கு தெம்பை அளிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள் சிரு. ஆனால் இது உன் கையில் தான் இருக்கிறது.

உன் குழந்தை வடிவில் தயவு செய்து எங்களிடம் திரும்பி வந்துவிடு. அந்த குழந்தையின் சிரிப்பில் உன்னை காண்போம். ப்ளீஸ். சிரு, உன்னை எங்கள் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். உன்னை எப்பொழுதுமே மிஸ் பண்ணுவோம். நீ என்றுமே எங்கள் நினைவில் இருப்பாய் என்று மிகுந்த உருக்கத்துடன் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News