×

போதை ஏறுது என்னை பார்க்கையிலே... மார்க்கமான வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி!

மைனா நந்தினி வெளியிட்ட வீடியோவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

 
சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நந்தினி. காமெடி செய்வதில் மைனா டாப்பில் உள்ளார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

இடையில் அவருக்கு சொந்த பிரச்சனைகள் வர அதில் இருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே மைனா நந்தினி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில காட்சிகள் நடித்தார்.

அவர் தனது மகனுக்கு "துருவன்" என பெயர் சூட்டியதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ரொமான்டிக் பாடலுக்கு செம எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News