Categories: Cinema News latest news

2 கோடி போச்சே!…பட்ஜெட்டை இழுத்துவிட்ட இயக்குனர் மிஷ்கின்….

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கதை சொல்லி இயக்குனர் ‘மிஷ்கின்’. இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு.

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ என்ற பாடல் வெற்றியடைந்ததை அடுத்து இப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதன் பின்னர் இவர் இயக்கிய அஞ்சாதே படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குப் பின் இவர் இயக்கிய ‘நந்தலாலா’ படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பின் முகமூடி, யுத்தம் செய், பிசாசு என பல படங்களை இயக்கினார். தற்போது இவர் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடிந்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தி நடித்துள்ளார். இப்படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முருகானந்தம் என்பவர் தயாரித்துள்ளார்.

படம் துவங்கிய போது இப்படத்தின் பட்ஜெட் ரூ.6 கோடி தயாரிப்பாளரிடம் கூறிவிட்டுதான் துவங்கினார் மிஷ்கின். ஆனால், மேலும் 2 கோடி செலவாகி மொத்த பட்ஜெட் ரூ.8 கோடி ஆகிவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் கோபப்படவில்லை. காரணம், பிசாசு 2 படம் ரூ.20 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடையந்த தயாரிப்பாளர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா