பிசாசு 2வில் ஆண்ட்ரியா - மிஷ்கின் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினர். தற்போது இப்படத்தில் நடிகை பூர்ணா பேயாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், மிஷ்கின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தில் ஆண்டிரியாவின் தோற்றத்தை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் ஆண்டிரியா ஒரு ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்டியன் பெண் போல் இருக்கிறார். எனவே, பிசாசு 2 திரைப்படத்தின் கதை கிறிஸ்துவ பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.