Categories: Cinema News latest news

ஆண்ட்ரியா நிர்வாண காட்சி எடுத்தேன்னு யார் சொன்னது.?! அந்தர் பல்டி அடித்த சர்ச்சை இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு வித்தியாசமான படைப்புகள் மூலம்  தனித்துவமாக நிற்கிறார் இயக்குனர் மிஷ்கின். உண்மையில் இவரது ஒவ்வொரு திரைப்படமும் ஆங்கில படத்திற்கு நிகரான தரத்துடன் எடுக்கப்பட்டு இருக்கும். அந்த அளவுக்கு நேர்த்தியாக படங்களை எடுத்து முடிப்பார் மிஷ்கின். அதேசமயம் சர்ச்சைகளுக்கும் எந்த குறைவும் வைக்க மாட்டார்.

இவர் மேடையில் பேசினாலே அன்றைய நாள் அது தலைப்புச் செய்தியாக சினிமா உலகில் மாறிவிடும். அந்த அளவுக்கு எதையும் மறைத்து வைத்து பேச மாட்டார். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே பேசி விடுவார். அவர் தற்போது பிசாசு இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் முதன்மை வேளத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா 15 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. அதனை சில பேட்டிகளில் அவரே கூறியிருந்தார். அது கதைக்கு தேவைப்பட்டது. அதனால் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்களேன் – முதலில் அட்டர் ஃபிளாப்… அடுத்தடுத்து மெகா ஹிட்.! மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் முதல்.. சமுத்திரக்கனி வரை…

அதன் பிறகு சில வாரங்களுக்கு முன்னர் அந்த காட்சியை நீக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த படத்தில் குழந்தைகளுக்கு தேவையான மெசேஜ் இருக்கிறது அதனால் அவர்களும் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த காட்சி நீக்கப்பட்டது என்று தகவல் வெளியானது.

இதையும் படியுங்களேன் – ரஜினி செய்த வேண்டாத வேலைகள்… ஒழுங்காக நடிப்பை மட்டும் பாருங்க சார்… விவரம் இதோ…

இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவலை வெளியேற்று உள்ளார் மிஷ்கின். அதாவது நிர்வாண காட்சியை எடுக்கவே இல்லையாம். அதற்கான போட்டோ சூட் மட்டுமே எடுத்தார்களாம். நிர்வாண காட்சியை நான் படமாக்கவே இல்லை என்று தற்போது மிஷ்கின் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan