Categories: Cinema News latest news

கதையை திருடாம படம் எடுக்க முடியாது? சர்ச்சையை கிளப்பிய மிஸ்கின்!..

நரேன் நடித்து தமிழில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின்.

அவரது முதல் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதில் வந்த வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் என்கிற பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. தற்சமயம் மாவீரன் மற்றும் லியோ திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் மிஸ்கின்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைகளை கொண்டு இருப்பதை பார்க்க முடியும்.

Mysskin

இயக்குனர் மிஷ்கின் பல படங்களின் பட வெளியீட்டு விழாவில் தற்சமயம் அதிகமாக கலந்து கொள்ள துவங்கியுள்ளார் ஒரு பேட்டியில் பேசும்போது படங்களில் கதை திருட்டு குறித்து பேசினார். அப்போது ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

அதாவது உலக அளவில் மொத்தமே ஆறு கதைகள்தான் உண்டு . அதைதான் அனைவரும் மாற்றி மாற்றி படமாக எடுக்கிறோம். தந்தை தாய் சகோதரர் போன்றவர்களுக்கு இடையே உள்ள உறவுகள், அவற்றை குறித்து பேசுவதாகதான் முக்கால்வாசி கதைகள் அமைந்திருக்கும். அந்த உறவுகள் நல்லவர்களாக இருக்கிறார்களா? கெட்டவர்களாக இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள் இப்படியாகத்தான் கதைக்களங்கள் செல்லும்.

Mysskin

அதேபோல ஒரு புது கதையை யாராலும் தயாரிக்க முடியாது.ஏற்கனவே இருக்கும் விஷயங்களை வைத்து தான் நாம் ஒரு கதையை உருவாக்குகிறோம். உதாரணமாக துப்பறிவாளன் திரைப்படத்தில் விஷால் போட்டிருக்கும் தொப்பி கூட நான் இன்னொரு படத்தில் இருந்து எடுத்ததுதான் என்று மிஸ்கின் கூறியுள்ளார். அனைத்து கதைகளுமே ஏதோ ஒன்றை சார்ந்து தான் உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அப்போ எந்த இயக்குனருக்குமே சொந்தமா கதை தோன்றாதா? என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்…

இதையும் படிங்க: ரஜினிக்கு வில்லனா? முடியவே முடியாது!. பட் அந்த டீலிங் பிடித்து ஒப்புக்கொண்ட கார்த்திக்..

Rajkumar
Published by
Rajkumar