Connect with us

latest news

சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது!. ஆனா இப்ப அவர்தான் ரஜினி!.. மிஷ்கினின் அது வேற வாய்.. இது நாற வாய்!..

இயக்குநர் மிஷ்கின் ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது என சொல்லி வந்த நிலையில், இப்போ அவரை ரஜினி ரேஞ்சுக்கு வச்சு பில்டப் பண்ணிட்டு வருவது தான் சிவகார்த்திகேயனின் ரியல் வளர்ச்சி என அவரது ரசிகர்கள் மிஷ்கினின் பழைய பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.

சினிமாவில் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என கேட்ட பல முகங்கள் தான் இன்று சூப்பர்ஸ்டாராகவும், தளபதியாகவும், குட்டி ரஜினியாகவுமே மாறி இருக்கிறது.

மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் மிஷ்கின் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பண்ண அலப்பறைகள் எல்லாம் ஏராளம் என சமீபத்தில் பேச்சுக்கள் கசிந்தன.

காசுக்காக வில்லனாக மாறிய மிஷ்கின்:

இயக்குநராக பிசாசு 2 படத்தை இயக்கி முடித்து விட்டு 2 ஆண்டுகளாக அந்த படத்தை இன்னமும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வரும் மிஷ்கின் நடிகராக நடித்தால் நல்ல சம்பளம் தருகின்றனர் என்பதை புரிந்துக் கொண்டு சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் மிஷ்கின்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இவர் மட்டுமில்லை, கெளதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட இன்னும் சில இயக்குநர்களும் பணத்துக்காக நடிகர்களாக  மாறி உள்ளனர்.

சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது: 

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களை இயக்கிய இயக்குநர் மிஷ்கின், நந்தலாலா படத்தை இயக்கி அந்த படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன் பின்னர், மீண்டும் இயக்கத்தில் ஆர்வம் செலுத்திய மிஷ்கின் யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என பல கவனம் ஈர்க்கும் படங்களை இயக்கினார்.

ஜீனியஸ் இயக்குநராக வலம் வந்த பீக்கில் விஜய் டிவியில் பேட்டியளித்த மிஷ்கினிடம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சிவகார்த்திகேயன் பற்றி எழுப்பிய கேள்விக்கு, யாருன்னே தெரியாது என படாரென பதிலளித்திருந்தார் இயக்குநர் மிஷ்கின். ஆனால், காலம் எவ்ளோ வேகமாக சுத்துது பாருங்க என்கிற சூர்யவம்சம் மீம் தான் தற்போது மிஷ்கினின் அந்த பழைய பேட்டிக்கு சரியாக பொருந்தும் எனத் தோன்றுகிறது.

அது வேற வாய்.. இது நாற வாய்: 

மாவீரன் படத்தில் பெரிய சம்பளத்துடன் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில், இயக்குநர் மடோன் அஸ்வினிடமே சிவாவை ரொம்ப டார்ச்சர் பண்ணாதப்பா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நடிக்கட்டும் என அலப்பறையை கிளப்பினாராம்.

மேலும், மாவீரன் ஆடியோ லாஞ்சில் குட்டி ரஜினின்னே சிவகார்த்திகேயனை மிஷ்கின் புகழ்ந்து பேசியது எல்லாம் வேறலெவல் காக்காப்பிடிக்கும் தனமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது என அவர் விஜய் டிவியில் டிடி நீலகண்டன் பேட்டியிலேயே பேசிய வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வைரலாக்கி இதுதான் எங்க எஸ்கேவோட வளர்ச்சி என கொண்டாடி வருகின்றனர்.

த்ரிஷாவும் தெரியாதாம்: 

இதில், இன்னொரு கொடுமை என்னவென்றால் ரஜினி பற்றி, அஜித் பற்றி கேட்கும் போது பதில் சொல்லும் இயக்குநர் மிஷ்கின் நடிகை த்ரிஷா பற்றி கேட்கும் போது தெரியாது என்கிறார். அதே போல சிவகார்த்திகேயன் பற்றி கேட்கும் போதும் தெரியாது என்கிறார். ஆனால், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடனும் த்ரிஷா நடித்துள்ள லியோ படத்திலும் அடுத்தடுத்து மிஷ்கின் நடித்துள்ள சூழல் உருவாகி உள்ளது. இதைத்தான் கர்மா இஸ் பூமராங் என்பார்கள் என த்ரிஷா ரசிகர்களும் தங்கள் பங்குக்கு மிஷ்கினை ட்ரோல் செய்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top