கொஞ்சம் காத்திரு.... நானும் வந்திடுறேன் - மறந்த நடிகருக்கு மிஷ்கின் இரங்கல்!
நடிகர் சத்யேந்திரா மரணம்:
தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகர், இயக்குனர் ,தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் இப்படி பன்முகத் திறமையை கொண்டு பிரபலமானவராக இருந்து வந்தவர் தான் சத்யேந்திரா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். அவரது உடலை வாங்க கூட யாரும் வராததால் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் கோரிக்கைகளையும் தெரிவித்து வருகிறார்கள். இது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது .
ஆரம்ப வாழ்க்கை:
சொந்த ஊர் ஆந்திரா....கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். அவரின் தந்தை சுதந்திர இந்தியாவின் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ரோல் மாடலாக இருந்து வந்த தந்தை இறந்ததால் நாடகங்களில் நடிக்க துவங்கிய சத்யேந்திரா தொடர்ந்து தேசிய விருது பெற்ற நாகபர்னா என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகினார் .

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 150கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சத்யேந்திராராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின்...
மிஷ்கின் இரங்கல்:
கருப்புகை துப்பி துப்பி புகைவண்டி வந்து விட்டதா? எந்த இருக்கை கிடைத்தது...? அசைந்து தூங்கு ... அயர்ந்து தூங்கு... ஊர் வரும் வரை கனவில் பற... எழு, இறங்கு , நட நண்பா... அந்த நிறமற்ற பாறையில் போய் உட்கார். கொஞ்சம் காத்திரு அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன் என மிஷ்கின் மிகவும் மனமுருகி இரங்கல் தெரிவித்துள்ளார்.
