துப்பறிவாளன் 2 முதல் 5 பாகம்!.. விஷாலுடன் சண்டை.. மிஷ்கின் ஓப்பன்...
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறியும் நிபுணராக நடித்து 2017ம் வருடம் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹீட் அடித்தது. அதன்பின் விஷால் தயாரிக்க துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியானது. இதற்காக லண்டனெல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். ஆனால் அங்கு மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட அந்த படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார்..
அதன்பின், துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷாலே இயக்க முடிவெடுத்தார். ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மிஷ்கின் ‘துப்பறிவாளன் 2 முதல் 5ம் பாகம் வரை கதை சுருக்கம் என்னிடம் உள்ளது. ஆனால் விஷாலுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதை நான் கை விட்டு விட்டேன். அதை நான் மீண்டும் தொடர போவதில்லை..
டிரெயின் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை எப்படி அணுகுவது என்று இன்னமும் நான் முடிவெடுக்கவில்லை. அஞ்சாதே திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தது.. அது முற்றிலும் வேறு ஒரு வகை திரைப்படம். இன்றைய Gen Z தலைமுறைனார் அந்த படத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையோடு எந்த அளவுக்கு தங்களை இணைத்துக் கொள்ள அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை’ எனக் கூறியிருக்கிறார்.
